• 5 years ago
சாதி மோதல் உருவாகாமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என புதியதாக பொறுப்பேற்ற நெல்லை மாநகர புதிய துணை ஆணையர் சாம்சன் நெல்லையில் தெரிவித்தார்.நெல்லை மாநகர போலீஸ் சட்டம்-ஒழுங்கு துணை ஆணையராக இருந்த சுகுணாசிங், சென்னைக்கு மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக சென்னை மாநகரத்தில் துணை காவல்துறை ஆணையராக பணியாற்றிய சாம்சன் நெல்லை மாநகர புதிய துணை ஆணையராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் நெல்லை மாநகர புதிய துணை ஆணையராக சாம்சன பொறுப்பு ஏற்றுக்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், நெல்லை மாநகர பகுதியில் சட்டம்-ஒழுங்கு சரியாக பராமரிக்கப்படும் என்று தெரிவித்த அவர், சாதி மோதல் உருவாகாமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

New deputy commissioner Samson confirmed action to prevent caste conflict.

#Commissioner
#CasteConflict
#Caste

Category

🗞
News

Recommended