குடும்ப தகராறு.. மகள், மகனுடன் தாய் தீக்குளிக்க முயற்சி- வீடியோ

  • 5 years ago
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே நெடுங்குளம் கிராமத்தைசேர்ந்த பஞ்சவர்ணம் என்பவர் தனது மகள் மற்றும் மகனுடன் விவசாய கூலி செய்து தனியாக வசித்து வருகிறார்.

இவரது கணவர் ஏழு வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டதால் தனியாக வசித்து வந்த இவரை (பஞ்சவர்ணம்) இவரது அண்ணன், அண்ணனின் மனைவி, தம்பி ஆகியோர் சேர்ந்து வீட்டை காலி செய்ய சொல்லி சித்ரவதை செய்து அடித்துள்ளனர்.

இதனால் மனமுடைந்த பஞ்சவர்ணம் சோழவந்தான் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.

ஆனால் காவல்துறையினர் அவர்களுக்கு ஆதரவாக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் பஞ்சவர்ணத்தின் அண்ணன், தம்பி ஆகியோர் வீட்டிலிருந்த சாமான்களை திருடி சென்று விட்டு எரித்து கொன்று விடுவதாக மிரட்டியுள்ளனர்.

இந்நிலையில் இன்று காலை மதுரை மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகத்தில் தாய், மகள், மகனுடன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

உடனடியாக அக்கம் பக்கத்திலுள்ள காவல்துறையினர் வாளியில் தண்ணீரை ஊற்றி காப்பாற்றினர்.

எனவே மாவட்ட ஆட்சியர் தகுந்த நடவடிக்கை எடுத்து வீட்டையும், எங்களுக்கும் பாதுகாப்பு தரும் படி மனு அளித்துள்ளார்.

இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.



des : Brother, daughter-in-law and brother-in-law told me to leave the house with a family dispute and try to burn the kerosene in Madurai district collector's office.

Recommended