• 6 years ago
சென்னை திருவல்லிக்கேணி பகுதியை சேர்ந்தவர் ஆனந்தன். இவர் பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர். இந்நிலையில் நேற்று முந்தினம் திருவல்லிக்கேணி பகுதியில் இருந்து ரவுடிகள் தகராறு செய்வதாக வந்த புகாரை விசாரிக்க சென்ற காவலர் ராஜவேலுவை, மர்ம கும்பல் அறிவாளால் சரமாரியாக வெட்டியது. இதில் 16 இடங்களில் வெட்டுப்பட்ட காவலர் ராஜவேலு ராயப்பேட்டை மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் 6 பேரை கைது செய்த போலீசார், தலைமறைவாக இருந்த ஆனந்தன் உள்ளிட்ட மேலும் சிலரை தேடி வந்தனர். இந்நிலையில் கிண்டி ஐஐடி அருகே ஆனந்தன் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து உதவி ஆணையர் சுதர்சன் தலைமையிலான போலீசார் அங்கு சென்றனர். அப்போது ரவுடி ஆனந்தனை பிடிக்க முயன்ற போது, பயங்கர ஆயுதங்களால் காவல் உதவி ஆய்வாளர் இளையராஜாவை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் உதவி ஆய்வாளர் இளையராஜா காயமடைந்தார். இதனையடுத்து தற்காப்புக்காக உதவி ஆணையர் சுதர்சன் துப்பாக்கியால் சுட்டதில் ஆனந்தன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஆனந்தனின் உடல் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. ஆனந்தன் கொலை தொடர்பாக குற்றவியல் நடைமுறை சட்டம் 176-ன் கீழ் கோடூர்புரம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக அறிக்கை பெற்ற பெருநகர தலைமை மாஜிஸ்திரேட் மலர்விழி, விசாரணை நடத்த மாஜிஸ்திரேட் சாண்டில்யனை நியமித்து உத்தரவிட்டுள்ளார். இவரது முன்னிலையில் ரவுடி ஆனந்தன் உடல் பிரதே பரிசோதனை நடைபெறும் என அவர் தெரிவித்துள்ளார்

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV

Category

🗞
News

Recommended