அனுமதி சீட்டு கட்டாயம் ! அதிகாரிகள் எச்சரிக்கை

  • 6 years ago
அனுமதி சீட்டு பெறாமல் தமிழகப்பகுதிகளுக்குள் வரும் வாகனங்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்குப்படும் தமிழ்நாடு வட்டாரபோக்குவரத்து துறை எச்சரிக்கை விடுத்துள்ளது

கேரள எல்லையோரம் அமைந்துள்ள சுற்றுலாத்தலங்களான குமுளிஇதேக்கடி போன்றவற்றிக்கு வருகைதரும் சுற்றுலாப்பயணிகளை தமிழக பகுதியான தேனி மாவட்டத்தில் உள்ள சுற்றுலாதலங்களுக்கு வாடகை வாகனங்கள் முலம் அழைத்து வரப்படுகின்றனர். இவ்வாறு வரும் வாடகை சுற்றுலா வாகனங்களும் சரக்கு வாகனங்களும் அனுமதி சீட்டு பெறுவதற்கு எல்லைப்பகுதியில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தேனிக்கு சென்று அனுமதி சீட்டு பெற்று வரவேண்டும் என்ற சூழ்நிலை உள்ளதால் ஏராளமான வாகனங்கள் அனுமதிசீட்டு பெறாமல் தமிழக பகுதிக்குள் வந்து செல்வதாக குற்றசாட்டு எழுந்து வந்தது. இதனை அடுத்து இன்று திருச்சியில் உள்ள தமிழ்நாடு வட்டாரபோக்குவரத்து துறை சிறப்பு செயலாக்கப்பிரிவின் சார்பில் வந்த அதிகாரிகள் தமிழக கேரள எல்லை வழித்தடமான குமுளி வழித்தடத்தில் இருந்து வரக்கூடிய சுமார் 200க்கும் மேற்ப்பட்ட வாடகை சுற்றுலா வாகனங்கள் மற்றும் வாடகை சரக்கு வாகனங்கள் போன்றவற்றை லோயர்கேம்ப் பகுதியில் நிறுத்தி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.இந்த சோதனையின் போது அனுமதி சீட்டு இல்லாமல் வந்த வாகனங்களுக்கு எச்சரிக்கை செய்தும் 40க்கும் மேற்பட்ட வாகனங்களுக்கு அபராதமும் விதிக்கபட்பட்டது.மேலும் இது போன்று தொடர்ச்சியாக இவ்வாறு அனுமதி சீட்டு பெறாமல் தமிழகப்பகுதிகளுக்குள் வரும் வாகனங்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்குப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.

Tamil Nadu Regional Transport Department warns against heavy vehicles coming into Tamil Nadu

Recommended