ஆளுநர் சும்மா இருக்க வேண்டிய அவசியம் இல்லை- செல்லூர் ராஜூ- வீடியோ

  • 6 years ago
ஒரு மாநிலத்தின் ஆளுநர் சும்மா இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என்று தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்துள்ளார்



மதுரையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ஒரு மாநிலத்தின் ஆளுநர் சும்மா இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என்றும் ஆளுநர் மாநில அரசின் உரிமைகளில் தலையிட வில்லை.அவர் மத்திய அரசாங்கத்தின் திட்டங்கள் சரிவர செயல்படுகிறதா என்று ஆய்வு செய்கிறார். தமிழக மக்கள் கொடுக்க கூடிய கோரிக்கைகளையும் மனுக்களையும் தமிழக முதல்வரிடம் தான் தருகிறார்.இதில் திமுகவின் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் தேவையற்றது என்றார் . மேலும் 8 வழிச்சாலை திட்டத்தை வேண்டுமேன்றே சிலர் தவறாக சித்தரிக்கிறார்கள்.8 வழிச்சாலையால் யாருக்கும் எந்த கெடுதலும் இல்லை.வன விலங்குகள் இயற்கைகளை அழிக்கமால் தேவையான இடங்களில் சுரங்க பாதை அமைக்கப்படும் எனத்தெரிவித்தார்..

des : Tamil Nadu Cooperative Minister Seloor K. Raju said that there is no need to be a Governor's Governor.

Recommended