நான் ஒரு நாள் கூட ஷூட்டிங்கை ரத்து செய்தது இல்லை தெரியுமா: நடிகை பெருமிதம்- வீடியோ

  • 6 years ago
25 ஆண்டுகளில் ஒருமுறை கூட படப்பிடிப்பை ரத்து செய்தது இல்லை என்று நடிகை கஜோல் தெரிவித்துள்ளார். பாலிவுட் நடிகை கஜோல் 25 ஆண்டுகளாக நடித்துக் கொண்டிருக்கிறார். இன்னும் பிசியான நடிகையாக உள்ளார். படங்கள் தவிர்த்து விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் தனது சினிமா வாழ்க்கை பற்றி கூறயிருப்பதாவது, சினிமா துறையில் உடல்நலம் பாதிக்கப்பட்டாலோ, ஷூட்டிங்கை ரத்து செய்தாலோ தயாரிப்பாளருக்கு லட்சக் கணக்கில் நஷ்டம் ஏற்படும். அதனால் நமக்கு நிறைய பொறுப்பு உள்ளது. என் 25 ஆண்டு கால சினிமா வாழ்க்கையில் நான் ஒரு நாள் கூட ஷூட்டிங்கை ரத்து செய்தது இல்லை. ஒரு நாள் கூட நான் விமானத்தையும் மிஸ் செய்தது இல்லை. என் மகளுக்கு 104 டிகிரி காய்ச்சல் இருந்தபோது மட்டும் தான் நான் இன்று படப்பிடிப்புக்கு வர மாட்டேன் என்று தயாரிப்பாளரிடம் கூறினேன். எனக்கு காய்ச்சல் இருந்தபோது எல்லாம் நடிக்க சென்றுள்ளேன் என்றார் கஜோல். நடிகர்கள், நடிகைகளுக்கு உடல்நலம் மிகவும் முக்கியம். கண்டநேரத்தில் வேலை செய்வது, சாப்பிடுவது, தூக்கம் சரியாக இல்லாதது என்று இருந்தாலும் பார்க்க அழகாக இருக்க வேண்டும்.


Actors avoid missing out on film’s shooting despite ill health as not appearing on the set leads to a loss, says Kajol. The actor, best known for her commercial potboilers such as Dilwale Dulhania Le Jayenge, Kuch Kuch Hota Hai, Kabhi Khushi Kabhie Gham, says she never cancelled a shoot in her 25-year-long career as she respects commitment.

Recommended