தகவல் வெளியிட்ட சுசீந்திரன்! சாபம் விடும் தல ரசிகர்கள்- வீடியோ

  • 7 years ago

பிரபல ஃபைனான்சியர் அன்புச் செழியனிடம் கந்துவட்டிக்குப் பணம் வாங்கி அவரது மிரட்டலால் நடிகர் சசிகுமாரின் மைத்துனரும், கம்பெனி ப்ரொடக்‌ஷன்ஸ் நிர்வாகியுமான அசோக் குமார் நேற்று தற்கொலை செய்துகொண்டார். இந்தச் செய்தியால் தமிழ்த் திரையுலகமே கொதித்துப் போயுள்ளது. கந்துவட்டிக் கும்பலுக்கு முடிவுகட்ட வேண்டிய நேரம் இது என தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் விஷால் அறிக்கை வெளியிட்டார். ஃபைனான்சியர் அன்புச் செழியனால் பல சினிமாக்காரர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இயக்குநர் சுசீந்திரன் பல அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்டுள்ளார். அஜீத் வாயில விழுந்தா அந்த அன்புச்செழியன் நல்லாவே இருக்க மாட்டான் என்று தல ரசிகர்கள் சாபம் விட்டுள்ளனர். நான் கடவுள் படத்தின்போது பைனான்ஸியர் அன்புச்செழியன் அஜீத்தை மிரட்டினார் என்று அனைவருக்கும் தெரியும். ஆனால் அன்புவின் பெயரை யாரும் வெளியே சொல்லவில்லை. இந்நிலையில் அன்பு மிரட்டியது உண்மை தான் என்று பளிச்சென்று தெரிவித்துள்ளார் இயக்குனர் சுசீந்திரன். அசோக் அண்ணனின் மரணம் தமிழ் சினிமாவின் கடைசி தற்கொலை மரணமாக இருக்கவேண்டும் எனத் தொடங்கி, அதிர்ச்சித் தகவல்கள் நிறைந்த அறிக்கையை சற்று முன்பு வெளியிட்டுள்ளார் இயக்குநர் சுசீந்திரன்.

Thala fans are angry with financier Anbuchezhiyan after director Suseenthiran confirmed that he threatened Ajith Kumar during Naan Kadavul days. Sasikumar's brother-in-law and official of company productions Ashok kumar, has committed suicide by the financier Anbuchezhiyan . In this case, Director Suseenthiran has released many shocking information about Anbuchezhiyan.

Recommended